Our Feeds


Friday, November 3, 2023

News Editor

ஆப்பிள் ஐபோன் விற்பனையில் பாரிய சரிவு


 சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற தொலைபேசி உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஐபோன், லேப்டொப், ஐபேட்ஸ் என இலத்திரனியல் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது.


ஆப்பிள் தொலைபேசிகளைப் பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் பிரபலங்கள் பலரும் ஆப்பிள் இலத்திரனியல் சாதனங்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.



சமீப காலமாக ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தும், ஆப்பிள் தொலைபேசி விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஜூலை – செப்டம்பர் காலத்தில் ஆப்பின் ஐபோனின் விற்பனை 10 சதவீதம் குறைந்து 89.5 டொலர் பில்லியனாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன்கள் வாங்க விதிக்கப்பட்ட தடையால் விற்பனை சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »