Our Feeds


Sunday, November 19, 2023

Anonymous

எலான் மாஸ்க் மீண்டும் தோல்வி - வெடித்தது ஸ்டார் ஷிப்ஸ்

 



உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கி விண்ணில் ஏவவும் முயற்சியிலுள்ளது. 


அந்நிறுவனம் உருாக்கியதில் மிகப் பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப் விண்கலம், கடந்த ஏப்ரல் மாதம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்ட நான்கு நிமிடங்களில் வெடித்து சிதறியது.


இந்நிலையில் நேற்று(18) டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார் ஷிப்பின் சோதனை 2-வது முறையாக ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.


ஏவப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் வெற்றிகரமாக ஸ்டார் ஷிப்பில் இருந்து பிரிக்கப்பட்டிருப்பினும் பூஸ்டரை தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்டார்ஷிப்பில் இருந்து பிரிந்த பூஸ்டர் வெடித்து சிதறியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »