எனது 13 வருட அரசியல் வாழக்கையில் யாரிடம் எந்த கொடுக்கல் வாங்களில் ஈடுபடவில்லை, அரச செலவில் விமானத்தில் சென்றதில்லை, மானிய எரிபொருள் வாங்கியதில்லையென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா கூறியதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர் தன்னை அச்சுறுத்தும் விதத்தில் சம்மி சில்வா கருத்துக்களை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு தனக்கும் தனது குடும்பத்திற்கும் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன்போது சபாநாயகரிடம் முறையிட்டார்.