Our Feeds


Tuesday, November 21, 2023

ShortNews Admin

பஜ்ஜட் | இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று



அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.


வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 7வது நாளான இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »