ராஜபக்சர் மற்றும் கும்பலை பொருளாதார குற்றவாளிகள் என்ற மாதிரி நீதிமன்றம் தீர்ப்பளிச்சு நாளாச்சு!
இப்போ சந்திரிக்கா முதல் சஜித்வரை சகலரும் பக்சர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோருகிறார்கள்!
இன்று சஜித் இதுபற்றி பேசும் போது ஆளும்கட்சி அராஜகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து சபையில் களமாடினார்கள்!
"நாட்டை காப்பாற்றிய தலைவனுக்கு எதிராக சபையில் பேச விட மாட்டோம்" என்ற மாதிரி மொட்டர்கள் கூச்சல் போட்டார்கள்!
தமிழ் மற்றும் தமிழ் பேசும் எம்பிகள் இதை அமைதியாக வேடிக்கை பாக்கலாம்!
நம் நேரடி தலையீடு "நாட்டை காத்த நாயகனுக்கு" ஆதரவாக பேரினவாத கூச்சல் எழுப்ப இனவாதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதே என் கணிப்பு.
ஆகவே, எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்!