Our Feeds


Thursday, November 9, 2023

SHAHNI RAMEES

இராகலையில் வாய் பேச முடியாத தாய்க்கு இலவச வீடு வழங்கி வைப்பு

 

 வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் மிக நீண்ட காலமாக தனக்கென ஒரு நிரந்தர குடியிறுப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற தற்காலிக குடிசையில் வாழ்ந்து வந்தவருக்கு  சகல வசதிகளுடன் தனி வீடு ஒன்றை அமைத்து (08) மாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

 

இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் செல்லம்மா என்பவருக்கே இந்த புதிய வீடு கையளிக்கப்பட்டது.

 

பிறவியிலேயே வாய் பேச முடியாதவர் இந்த செல்லம்மா இவர் திருமணமாகி ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்த சில காலத்தின் பின் கணவரும் இறந்துவிட்டார்.

 

இந்த நிலையில் மோகனபிரியா என்ற தனது மகளை வைத்து கொண்டு தோட்ட தொழிலாளியாக தாம் வசிக்க ஒரு நிரந்தர வீடு இல்லாமல் தோட்ட நிர்வாகம் மலசலக்கூடம் அமைக்க வழங்கப்பட்ட ஒர் இடத்தில் குடிசை ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தார்.

 

இச் சந்தர்ப்பத்தில் இராகலை உயர் நிலை கல்லூரியில் பயிலும் இவரின் மகள் தனது கல்வியை முறையாக முன்னெடுக்க வீட்டு வசதியின்றி சொல்லன்னானா துயரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

 

இவர்களின் நிலையை உணர்ந்து இராகலை தோட்ட நிர்வாகம், தோட்ட மக்கள்,நகர வர்த்தகர்கள்,இராாலை உயர் நிலை பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், வலப்பனை பிரதேச செயலகம், செஞ்சிலுவை சங்கம், வேல்ட் விஷன் உட்பட சமூக சேவை அமைப்புகள் தங்களின் நிதி,பொருட்கள் பங்களிப்புகளை வழங்கி இவர்கள் வசிக்க தனி வீடு ஒன்றை அமைக்க உதவியுள்ளனர்.

 

இவ்வாறு வழங்கப்பட்ட உதவியை கொண்டு அமைக்கப்பட்டுள்ள வீடு (08.11.2023) மாலை உத்தியோகப்பூர்வமாக செல்லம்மாவுக்கு கையளிக்கப்பட்டது, இதன் போது சமய குருமார்கள், வலப்பனை பிரதேச செயலாளர் திருமதி லிந்தகும்பர உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள்,பொது அமைப்பினர் கலந்து கொண்டு வீட்டினை வழங்கி வைத்தனர்.

 

அத்துடன் புதுமனைக்கு தேவையான தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வருகைதந்திருந்தோரால் இக்குடும்பத்திற்கு பரிசளிக்கபட்டமை விசேட அம்சமாகும்.

ஆ.ரமேஸ்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »