Our Feeds


Saturday, November 18, 2023

SHAHNI RAMEES

கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைப்பு?

 



கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த விலை குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தால் இந்நிலை மாறலாம் என அவர் தெரிவித்தார்.


சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »