நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவுத் திட்டத்தில் தீர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது, எனவே அந்த நிலைமையை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த பணிகளை அரசாங்கம் தற்போது நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வணிக நிர்வாக முதுகலை பட்டதாரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார்.
புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக சமூக நலன்களை மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.