தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று (09) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
அதனையடுத்து, தபால் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பணிகள் இடம்பெறாமையால் சுமார் 10 இலட்சம் தபால்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலைய கட்டடங்களை சுற்றுலா நோக்கங்களுக்கு விற்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தபால் ஊழியர்கள் கடந்த 48 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.