மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கையின் தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் இன்று (21) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2023 இலங்கை பசுமை ஹைட்ரஜன் கருத்தரங்கத்தில் வைத்து இந்த வரைப்படம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
USAID உடன் இணைந்து இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரி சபையினால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.