விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(20) இடம்பெறவுள்ளது.
இடைக்கால குழுவுக்கு நவம்பர் 07ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, தடை உத்தரவை நீக்குமாறு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.