Our Feeds


Monday, November 20, 2023

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அவசர அறிக்கை

 



ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை தடை செய்யுமாறு ஸ்ரீலங்கா

கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்ட கருத்தை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று நிராகரித்துள்ளது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை, சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் தடை செய்திருந்தது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமையவே, இந்த தடை விதிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.


இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று நிராகரித்தது.


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் யாப்பிற்கு அமைய, அரசாங்கத்தின் தலையீடு இன்றி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


அத்துடன், அனைத்து உறுப்புரிமை நாடுகளின் பணிப்பாளர்களுடன் நடாத்தப்பட்ட கூட்டத்தின் போதே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை தடை செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமையவே இந்த தடை விதிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் முழுமையாக நிராகரித்துள்ளது.


அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையுத்தரவை, விரைவில் நீக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ICCக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதங்கள் சபையில் சமர்ப்பிப்பு


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்யுமாறு, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியதாக கூறப்படும் மூன்று கடிதங்களை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (20) சமர்பித்தார்.


குறித்த மூன்று கடிதங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவை எனவும் அவர் சபையில் கூறுகின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »