Our Feeds


Wednesday, November 15, 2023

News Editor

கொங்கிறீட் தூண் உடைந்ததில் காயமடைந்த மாணவி மரணம்


 வெல்லம்பிட்டிய - வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


முதலாம் தர மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »