Our Feeds


Saturday, November 18, 2023

Anonymous

அமேசான் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு - AI ஊழியர்களுக்கும் ஆபத்து.

 



அமேசான் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது.


கொரோனா காலத்திற்குப் பின்னர் பிரபல நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 


இந்நிலையில், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை அமேசான் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்கள் வேலை இழக்கின்றனர். 


முன்னதாக கடந்த வாரம், அமேசான் தனது இசை மற்றும் கேமிங் பிரிவுகளிலும், சில மனிதவளப் பணிகளிலும் வேலைக் குறைப்புகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »