Our Feeds


Sunday, November 26, 2023

News Editor

உரத்தின் விலையை 9000 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அங்கீகாரம்


 இந்த பருவத்தில் உரத்தின் விலையை 9000 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


19,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உர மூட்டை ஒன்றின் விலையை 9000 ரூபாவாக குறைப்பதற்கு தாம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதன்படி அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் உரத்தை 9000 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »