Our Feeds


Thursday, November 2, 2023

SHAHNI RAMEES

காஸாவிற்கான சவுதி அரேபியாவின் உதவிகளைத் திரட்டும் பணி, மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் 50 மில்லியன் ரியாலுடன் ஆரம்பம்

 



காஸாவிற்கான சவுதி அரேபியாவின் உதவிகளைத் திரட்டும்

பணி, மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரின் 50 மில்லியன் ரியாலுடன் ஆரம்பம்


சவுதி அரேபியா மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நாடுகளில் பட்டியலில் முதன்மை வகிக்கின்றது, அதன் உதவிகளை பெறாத நாடுகளே இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. 


சவுதி அரேபியாவின் உதவிகளை தொடர்ச்சியாக பெரும் நாடுகளில் பலஸ்தீன் முதலிடம் வகிக்கின்றது, 1997 முதல் 2023 வரை, 274 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 5,187,144,254 டாலர்களை சவுதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.


சவுதி அரேபியாவின் (ஸாஹிம்) தளம், சவுதி அரேபியாவின் உத்தியோகபூர்வ உதவிகளை திரட்டும் ஒரு தலமாகும், 02/11/2023 இன்று சவுதி அரேபியாவின் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களும், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களும்,  பாலஸ்தீனிய மக்களுக்காக,  நன்கொடைகளை திரட்டுவதற்காக, (ஸாஹம்) தளத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதியை ஆரம்பிக்கும்படி பணித்துள்ளதுடன், குறித்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரியால்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத்திற்கான மன்னர் சல்மான் மையத்தினூடாக நிறுவகிக்கப்படுகின்ற (ஸாஹிம்) தளத்தினூடாக நீங்களும் நன்கொடைகளை வழங்கலாம், விரும்புகின்றவர்கள் பின்வரும் இணைப் பயன்படுத்தலாம்:


https://tinyurl.com/yuwmc6sv


காஸாவில் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சவுதி அரேபியா அதன் ராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி அப்போரை உடனடியாக நிறுத்துவதற்காகவும்,  பலஸ்தீன் நாடு உருவாகுவதற்காகவும், அதன் பிரச்சினைகள் நீங்குவதற்காகவும் பலத்த முயற்சிகளைத் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அல்லாஹ் குறித்த அனைத்து முயற்சிகளையும் வெகு விரைவில் நிறைவேற்றி வைப்பானாக.


கலாநிதி M H M அஸ்ஹர்

பணிப்பாளர்,

அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி

மல்வானை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »