Our Feeds


Tuesday, November 7, 2023

News Editor

நெல் திருட்டு ; 5 உத்தியோகத்தர்கள் இடைநீக்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நான்கு களஞ்சியசாலைகளில் நெல் காணாமல் போனமை தொடர்பில் ஐந்து களஞ்சியசாலை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 பொல்கஹவெல, ஆனமடுவ, நிகவெரட்டிய மற்றும் மஹவ ஆகிய நான்கு நெல் களஞ்சியசாலைகளில் ஒன்பது இலட்சத்து எழுபதாயிரத்து ஐம்பது கிலோகிராம் நெல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நெல் இருப்பின் மொத்த பெறுமதி  ரூ.100 மில்லியன் ஆகும்.

2021-22 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற  திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து விசாரணை அறிக்கை செவ்வாய்க்கிழமை (7) விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதுடன், விசாரணையின் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »