Our Feeds


Wednesday, November 22, 2023

Anonymous

காஸாவில் 4 நாட்கள் யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் | ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

 




இஸ்ரேலினால், பாலஸ்தீன காஸா பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் இன அழிப்பு தாக்குதல்களை நிறுத்துமாறு உலக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். 


கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்த தற்காலிக யுத்த நிறுத்தம் 4 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.


காஸாவில் 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.


ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய விபரங்கள்.


அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தரப்பினால் கைது செய்யப்பட்ட 50 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.


இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். 


4 நாட்களும் 24 மணி நேர யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்படும். 


இதுவரை காஸா முழுவதும், கான்யூனுஸ் பகுதிகள் மற்றும் இந்தோனேஷிய மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலிய குண்டு வீச்சு தொடர்கிறது.


இதுவரை காஸாவில் 14100 அப்பாவி பொதுமக்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். 


இருப்பினும் இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். 


மேலும் ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்களின் இலக்கு என்றும் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.


முன்னதாக நேற்று, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா (Ismail Haniyeh), "இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்திருந்தார். கட்டார் இருதரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் சுமுக முடிவு விரையில் எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகின. 


இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு காசா உட்பட காசாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் அந்த பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், இஸ்ரேல் காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.நா., உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகள் எனப் பல தரப்பிலும் முன்வக்கப்பட்ட கோரிக்கை தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ShortNews.lk

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »