காசாவில் தினமும் 4 மணிநேரம் தமது இராணுவ நடவடிக்கைகளை
இடை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கை அங்குள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளித்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியிறுந்தது.
எனவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 150 முகாம்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமான பலஸ்தீனிய ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசாவின் நிலைமை மேலும் தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றச்சாட்டியுள்ளது.