Our Feeds


Monday, November 20, 2023

ShortNews Admin

உயர் அதிகாரிகள் 4 பேர் CID யினரால் கைது!



சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட 4 பேர் தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களை குற்றப் புலனாய்வுத் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »