Our Feeds


Thursday, November 16, 2023

News Editor

பூமியில் விழுந்த சந்திரயான்-3 விண்கலத்தின் பாகம்


 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ரோக்கெட் பாகம் பூமியில் விழுந்துள்ளது.

 

விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களுக்குப் பின் வடக்கு பசிபிக் கடல்பகுதியில் ராக்கெட் பாகம் விழுந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் எல்.வி.எம் 3 எம்.4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் திகதி நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் திட்டமிட்டபடி பணிகளை செய்ததன் மூலம் சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்தது. இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இது குறித்து இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

 

சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. நேற்று(15) இந்திய நேரப்படி மதியம் 2.42மணி அளவில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »