Our Feeds


Tuesday, November 28, 2023

SHAHNI RAMEES

மேலும் 33 பலஸ்தீன, 11 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு...!



 இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப்

போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் நேற்று(27) மேலும் 11 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக சிறையில் இருந்து 33 பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்துள்ளது.




இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 200க்கும் மேற்பட்டோரை விடுவிக்கும் வகையில் முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து கத்தார், எகிப்து, அமெரிக்கத் தலையீட்டின் விளைவாக போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் நேற்று(27) பெண்கள், குழந்தைகள் என மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. பதிலுக்கு இன்று அதிகாலை 33 பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.




போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பிலும் 4 முறை பணயக் கைதிகள் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக காசாவாசிகள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். காஸாவுக்கு கடந்த 4 நாட்களாக ஐ.நா.வின் நிவாரண வாகனங்கள் பெருமளவில் சென்றடைந்துள்ளன. இதற்கிடையில் இஸ்ரேல் வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் புனரமைப்புக்கு உதவுவேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »