Our Feeds


Monday, November 20, 2023

ShortNews Admin

2 ஆயிரம் தாய்மார்கள் பாதிப்பு - காரணத்தை வெளியிட்டார் இராஜாங்க அமைச்சர் கீதா



குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022ம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 இளம் வயது தாய்மார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணிகள் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தன என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கையில் 124,482 குழந்தைகளை உள்ளடக்கிய 89,164 ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் (single-parent families) உள்ளன.


பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »