பூசா சிறைச்சாலையில் கைதி ஒருவர் 23 சி.சி.ரி.வி. கெமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
சி.சி.ரி.வி. கெமராவை சேதப்படுத்திய சிறை கைதிக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைக்கைதிகளின் மோசமாக நடத்தை காரணமாக கடந்த காலங்களில் பூசா சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு சிறை கைதிகள் பலமுறை மாற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .