ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்த குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 07ஆம் திகதி 14 நாள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த தடை உத்தரவை நீக்குமாறு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை, அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிவிப்பின்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டு அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.