Our Feeds


Monday, November 13, 2023

SHAHNI RAMEES

தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம் - 2024 பட்ஜெட் - PART 2

 



* தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே எனக்கு முக்கியம் - ரணில் 


* அரச பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை முக்கியம் - அதனால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு - நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும். - ரணில் 


* ஓய்வூதியச் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு - ரணில் 


 * பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு  


* அரச பணியாளர்களுக்கு முன்னரைப்போன்று இடர்கால கடன் மீண்டும் வழங்கப்படும்.


* அஸ்வெசும நிவாரணத்திற்காக மும்மடங்கில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு - அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் .சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும்.அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும் , முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.


 * கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு 

* நிவாரணக்கடன்களுக்காக விசேட ஏற்பாடுகள் .சிறு நடுத்தர வர்க்க கைத்தொழில்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.


* விவசாயிகளின் காணி பிரச்சினையை தீர்க்க விசேட கொள்கை.அரச காணிகளை பயன்படுத்த தீர்மானம் 


 * அரச தொடர்மாடிகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் உரித்தாகும்.அவர்களிடம் இனி வாடகை அறவிடப்படமாட்டாது.


*பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைக்க நிதி ஒதுக்கீடு 


* மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு 


* மலைநாட்டு பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு 


* விசேட திட்டங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம் .அரச நிதி கட்டுப்பாடு உட்பட வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.


* வீதிகள் ,புனரமைக்க புனரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


* கல்வி மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு - அதற்காக விசேட திட்டம் வகுப்பு 


* உயர்தர வகுப்பில் சித்தியடையும் மாணவர்களுக்கு விசேட செயற்திட்டங்கள்.புதிய நான்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.


* அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபா அரசு செலவிடும்.


 * பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்க விசேட நிதி ஒதுக்கீடு.அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்க சட்டத்தில் திருத்தம் செய்து இடமளிப்பு 


* வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர் கல்விக்கடன் - தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு 


* பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு - அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு 


* அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் அறிமுகம் - மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும் அறிமுகம்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »