எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைப்பதில் மட்டும் திருப்தியடைய முடியாது என்றும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் மற்றும் விடயங்களை நிறைவேற்றுவது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்றும், முன்மொழிவுகள் நடக்கிறதா இல்லையா மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து அறிக்கையிடப்பட வேண்டும் என்றும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் வெற்றியின் அடிப்படையிலேயே அடுத்தாண்டுக்காக அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் வெற்றி தங்கியுள்ளதாகவும், கடந்த வருட வரவு செலவுத் திட்ட தீர்மானம் 71 இல், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கண்காணிப்பதற்காக படையணி ஒன்றை நிறுவுவதற்கான பிரேரணை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட போதிலும்,இந்த யோசனையைக் கூட இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (14) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
Verite Research அறிக்கையின் பிரகாரம்,
2023 இக்கான வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிட்ட 50 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏற்பாடு மூலம் 97 சதவீதம் எதற்காக ஒதுக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான தகவல்கள் இல்லை என்றும், அவ்வாறே, கடந்த வருடம் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்ட 25 பிரேரணைகளில் 17 பிரேரணைகள் குறித்த தகவல்கள் இல்லை அல்லது அது குறித்து தகவல்களை கண்டறிய முடியாதுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
வரவு செலவுத் திட்ட நம்பகத்தன்மை குறித்து சிக்கல்கள் உள்ளன.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான தரவுகள் இன்மை 2017 ஆம் ஆண்டு 17 வீதமாக காணப்பட்டது 2023 ஆம் ஆண்டு 97 வீதமாக காணப்படுவது எவ்வாறு? இது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர் யார் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், வரவு செலவு திட்டம் தொடர்பான நம்பகத்தன்மையில் சிக்கல் இருப்பதால்,பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இந்த பொறுப்புக்கூறல் இல்லை என்றால் அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகளில் 77 திட்டங்களில் 69 திட்டங்கள் குறித்த தகவல்கள் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஆய்வுப் பிரிவின் பொருளாதார நிபுணர்கள் குழு இணைந்து, 2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் 77 அம்சங்கள் குறித்த பகுப்பாய்வின் பிரகாரம், 69 முன்மொழிவுகளின் தகவல்கள் முழுமையடையவில்லை என்றும்,
அவற்றில்,12 முன்மொழிவுகளின் (17%) தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும், 16 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் ஆரம்பிக்கப்படவே இல்லை என்றும், 29 திட்டங்களின் முன்னேற்றம் (42%) 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவும், 12 திட்டங்களின் முன்னேற்றம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது.
மாகாண சபைகளுக்குட்பட்ட 139 பாடசாலைகளுக்கும்,23 தேசிய பாடசாலைகளுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக 2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 200 மில்லியன் ரூபா ஒதிக்கியிருந்த போதிலும்,
இன்று என்ன நடந்துள்ளது என்றும்,அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும்,
தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்றும், பல்கலைக்கழக பட்டதாரிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்கான சபை தொடர்பான சட்ட மூலம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு புலமைப்பரிசில் திட்டம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலே உள்ளதாகவும், உலகளாவிய காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதாக கூறினீர்கள் அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், இலங்கையின் வரலாறு தொடர்பாக ஆராய்வதற்கான நிறுவனம் ஆரம்பிக்கப்படும் என கூறுனீர்கள், அதுவும் இன்னும் செயற்படுத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு ஆதரவு வழங்குவதாயின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்றும்,ஆனால் அவ்வாறு பூரணப்படுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டர்.
வரலாற்றில் முன்னர் நிகழ்ந்த தவறுகளைச் செயல்படுத்தாமல், தவறுகளைச் சரி செய்து கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும், இம்முறை சில முன்மொழிவுகள் 2023 ஆம் ஆண்டிலும் முன்வைக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும்,
இம்முறையும் குறித்த முன்மொழிவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்