Our Feeds


Monday, November 27, 2023

Anonymous

200 வருடங்களுக்கு முன் கொண்டு செல்லப்பட்ட 6 தொல்பொருள் சின்னங்களை திருப்பி அனுப்பும் நெதர்லாந்து

 



சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆறு தொல்பொருள் சின்னங்களை எதிர்வரும் 5 மற்றும் 6ம் திகதிகளில் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெறும் விசேட வைபவத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக நெதர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது.


நெதர்லாந்து கலாசார அலுவல்கள் தொடர்பான அரச செயலாளர் குணே உஸ்லு கடந்த ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது, ​​தொல்பொருட்களின் உரிமையை ஒப்படைப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டதாக நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.


சர்வதேச கலாசார ஒத்துழைப்புக்கான நெதர்லாந்து தூதுவர் டிவே வான் டி வீர்ட் நெதர்லாந்தின் சார்பில் தொல்பொருட்கள் கையளிக்கப்படுவதை மேற்பார்வையிட்டு வருவதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »