Our Feeds


Wednesday, November 15, 2023

ShortNews Admin

வவுனியாவில் 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளது - 93 குளங்களின் நீர்மட்டம் உயர்வு



வவுனியாவில் 93 குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.



தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள் வான் பாய்கின்றன. மேலும் பல குளங்கள் வான் பாயும் கட்டத்தை அடைந்துள்ளன.



அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 15 குளங்கள் சிறு உடைப்பெடுத்த நிலையில், அவை தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



இதேவேளை, வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன், நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »