Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி & WhatsApp இலக்கம் அறிமுகம்.

 



இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.


இந்த மோதலின் காரணமாக இலங்கையர் ஒருவர் லேசான காயத்திற்கு உள்ளானார். இவர் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்து திரட்டிவருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். 


சுமார் 8,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர். 90 வீதமானோர் பராமரிப்பு சேவை தொழிலில் துறையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அங்குள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலை பேசி இலக்கங்கள் அறிமுக்கப்பட்டுள்ளன.


இதற்கமைவாக 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக  அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற உடனடி (HotLine) தொலைபேசி இலக்கத்தினூடாகா தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »