Our Feeds


Monday, October 16, 2023

Anonymous

VIDEO: பாலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றுபட்டு நிற்பார்கள் - இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவரிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் உறுதி

 



இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம்.எச். டார் செயிட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (16) தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


இதபோது, உலகின் கடைசி ஆக்கிரமிப்பு நாடான பலஸ்தீன தேசத்தினதும் மக்களினதும் விடியலுக்கான தீர்வாக ஐக்கிய நாடுகள் சபை இறுதியாக நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சட்டங்கள், சர்வதேச சமவாயங்கள், மனித உரிமை பிரகடனங்களை நடைமுறைப்படுத்த சர்வதேசம் அர்ப்பணிப்புடன் தலையிட வேண்டும் என்றும், இவ்விவகாரத்தில் சில நாடுகளின் ஒரு தலைபட்ச போக்குக்கு இடமளிக்க முடியாது என்றும், அமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட சர்வதேசம் கூடிய கரிசனையோடு செயற்பட உலக தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்றும், ஜனநாயக ரீதியிலான தீர்விலேயே விடியலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் இப்பிரச்சினையை தீர்க்க உலக தலைவர்கள் வரலாற்றை ஆய்ந்து சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

1948 அரபு-இஸ்ரேல் போர் மற்றும் அதைத் தொடர்ந்த மோதல்களுக்குப் பிறகு அதிலிருந்து இன்று வரை பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற விடயத்தின் அடிப்படையில் மோதல்கள் துரதிஷ்டவசமாக விரிவடைந்து சென்றாலும், இஸ்ரேலுக்கு மாத்திரமன்றி அதிகாரம் படைத்த இஸ்ரேல் சார்பு குழுக்களுக்கும்,அந்த சிந்தனை முகாமுக்கும் பலத்த அடியை ஹமாஸ் போராளிகளின் தாக்குதல் காண்பிப்பதாகவும், அம்முகாம் கண்ட பலத்த தோல்வியுமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பலஸ்தீனில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே தமதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் நிலைப்பாடாகும் என்றும், நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதுடன் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் தேசியம், அரச நிருவாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இது சர்வதேச அளவில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும் என்றும், பன்முக பார்வையில் பலஸ்தீன சுதந்திர தேசத்திற்கு சர்வதேசம் தற்போதேனும் ஒன்றுபடாவிட்டால் மனிதாபினம் தோல்வியட்டதாகவே அர்த்தப்படும் என்றும், மனிதாபின தோல்விக்கு இதை விட முன்ணுதாரனம் வேறில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை உங்களுடன் இருக்கின்றது என்பதை பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »