Our Feeds


Sunday, October 22, 2023

Anonymous

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள அதிநவீன THAAD ஏவுகனைகள் - அதன் சக்தி என்ன?

 



இஸ்ரேல்- ஹமாஸ் போராளிகள் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது. 


காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராகவுள்ளது. இந்த சூழலில், பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயற்பட ஆரம்பித்துள்ளது. 


இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் வழங்கி வருகின்றன.


இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு வழங்க உள்ளது. இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »