Our Feeds


Wednesday, October 4, 2023

Anonymous

SLPP யினரின் மின்சார கட்டணத்தை செலுத்தவுள்ள சனத் நிஷாந்த - கட்டண பாக்கியுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் சர்ச்சைக்குரிய மின்கட்டணத்தை செலுத்திய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குறைந்த வருமானம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டு மின்கட்டணங்களையும் செலுத்த தீர்மானித்துள்ளார்.


தனது சனத் நிஷாந்த அறக்கட்டளையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் மின் கட்டணத்தைச் செலுத்த தீர்மானித்துள்ளதாக பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

SLPP குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது மின்கட்டணத்தைச் செலுத்த, 077 7449492 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அல்லது 032 2259130 என்ற அறக்கட்டளையின் இலக்கத்திற்கு தமது மின் கட்டணத்தின் புகைப்படம் பிடித்து அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »