Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

மருந்து இறக்குமதியில் மோசடியா? Immunoglobulin மருந்தை நாங்கள் அனுப்பவில்லை - மருத்தது இந்திய நிறுவனம்!

 



சுகாதார அமைச்சு  தற்போது பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைத்துள்ள இம்யுனோகுளோபலின் Immunoglobulin மருந்தினை இலங்கைக்கு தான் அனுப்பவில்லை என இந்திய நிறுவனம் மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த மருந்து எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளதுடன் மோசடி இடம்பெற்றதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.


இலங்கையில் தற்போது சுகாதார அமைச்சு பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைத்துள்ள  இம்யுனோகுளோபலின் மருந்தினை இலங்கைக்கு வழங்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிறுவனம் Livealth Biopharma Pvt. Ltd. அதனை தான் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனம் இலங்கையின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதுடன் இந்த மருந்தினை உற்பத்தி செய்தது யார் இலங்கை இறக்குமதியாளர் யார் இந்தியாவின் எந்த துறைமுகத்திலிருந்து இந்த மருந்துகள் வந்தன- இலங்கையின் எந்த துறைமுகத்திற்கு வந்தன என்ற விபரங்களை கோரியது.

உண்மையான மருந்து ஏற்றுமதியாளர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கும்  மிக முக்கியமாக விலைமதிப்பற்ற  உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இத்தகைய மோசடி நிறுவனங்களை இனம்கண்டு நீதியின் முன் நிறுத்தவேண்டும் என  இந்தியாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இது குறித்து உத்தியோகபூர்வ முறைப்பாட்டை பதிவு செய்யப்போவதாக தெரிவித்துள்ள இந்திய நிறுவனம்  தெரிவித்துள்ளது..

22500  இம்யுனோகுளோபலின் மருந்துகளிற்கான கேள்விப்பத்திரம் குறித்து தெளிவுபடுத்தலை பெறுவதற்காக சண்டே டைம்ஸ் இந்திய நிறுவனத்தை தொடர்கொண்டுள்ளது

நிறுவனம் அதனை உற்பத்தி செய்வதாகவும் சீதுவையை சேர்ந்த என்ற நிறுவனம்  அதனை  இலங்கைக்கு இறக்குமதி  செய்துள்ளது.

இந்த மருந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பல மருத்துவமனைகள் தெரிவித்திருந்தன - இதனை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த மருந்துகளை நாங்கள் உற்பத்தி செய்யவில்லை இலங்கைக்கு வழங்கவில்லை என இந்திய நிறுவனத்தின் பேச்சாளர் சண்டே டைம்சிற்கு  தெரிவித்துள்ளார்.

முழுமையான வேண்டுகோள்களின் கீழ் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 3850 வில்லைகளை மருத்துவ விநியோக பிரிவு மருத்துவமனைகளிற்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த மருந்துகளிற்கான ஒரு தொகுதி கட்டணமாக 40 மில்லியனை சுகாதார அமைச்சு செலுத்தியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »