Our Feeds


Monday, October 23, 2023

Anonymous

Google, Facebook, WhatsApp அனைத்தையும் இலங்கை இழக்க வேண்டிவரும் - நீதிமன்றில் சுட்டிக்காட்டு.

 



நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக நிறுவனங்கள் மற்றும் பரப்புரை நிறுவனங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட  மனுதாரர்கள் நிகழ்நிலை சட்ட மூலத்தை சவாலிற்குட்படுத்தியுள்ளனர்.


நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்  சிறிதளவு கூட  நிகழ்நிலை பாதுகாப்பினை உறுதி செய்யவில்லை மாறாக மக்கள் தங்கள் கருத்துக்களை எண்ணங்ளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காகவே இந்த சட்ட மூலம்  உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மனுதாரர்கள்  குறிப்பிட்ட சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்படக்கூடிய ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு எவ்வாறு 24 மணித்தியாலத்திற்குள் தாங்கள் பிழையான பதிவு என கருதும் பதிவை அகற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதித்துறையை கூட சாராத ஐந்துபேர் கொண்ட குழுவினரை எது சரியான பதிவு எது பிழையான சமூக ஊடக பதிவு என்பதை தீர்மானிப்பதற்கு அனுமதிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணம் இது இது மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரகலயவின் ஒரு பகுதியான அரசியல் ரீதியில் உடன்பட மறுத்தலை அடிப்படையாக கொண்டே இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் எவ்வாறு மதஐக்கியம் என்ற போர்வையில் ஐசிசிபிஆர் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு பதிவை அகற்ற மறுத்தால் நீதவான் பதிவிட்டவருக்கும் இணையசேவை வழங்குநருக்கும் சிறைத்தண்டனை விதிக்கலாம் என சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது  - மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பயன்படுத்தும் சேவைகளை வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களே வழங்குகின்றன என்பதை சட்ட மூலம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள மனுதாரர்கள் சர்வதேச நிறுவனங்கள் சர்வதேசரீதியில் அரசாங்கத்தின் இந்த கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஆபத்திற்கு பதில் இலங்கையிலிருந்து வெளியேறக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் நிறைவேறினால் இலங்கை கூகுள் முகநூல் டுவிட்டர் இன்ஸ்டகிராம் வட்ஸ்அப் ஆகியவற்றை மாத்திரமல்லாமல் கூகுள் தேடுதல் பொறிகளையும் இழக்ககூடும் என நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »