Our Feeds


Friday, October 20, 2023

Anonymous

நபியவர்களையும், இஸ்லாத்தையும் சகட்டு மேனிக்கு அவமதிப்பதற்கு முன் விளக்கம் கேளுங்கள் | இந்திக்கவுக்கு இஸ்லாம் பாடம் நடத்திய சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் - நீதிமன்றில் நடந்தது என்ன?

 







புனித இஸ்லாமிய மார்க்கத்தையும், அல்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட இந்திக்க தொடவத்தவுக்கு எதிரான வழக்கில் இந்திக்க தொடவத்தவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. 


கொழும்பு, மாளிகாகந்த நீதிமன்றில் இது தொடர்பான வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.


இந்திக்க தொடவத்த ஒரு புலன் குறைந்தவர் (பார்வையற்றவர்) என்பதால் சிலவற்றை அறியாமல் பேசிவிடுவார் என நீதிமன்றில் தெரிவித்த  இந்திக்க தொட்டவத்தவத்தவின் சட்டதரணிகள் அவர் சார்பில் தமது வருத்தத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கடும் நிபந்தணையின் அடிப்படையில் இந்திக்க தொட்டவத்தவுக்கு பிணை வழங்கப்பட்டது. 


முஹம்மத் நபி (ஸல்) மற்றும் இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக பொய்யான கருத்துக்களை  கூறி  மிகவும் கீழ்த்தரமான இழிவான கருத்துக்களை  யூடியுப் தளத்தில் பதிவிட்டமைகைகாக இந்திக்க தொட்டவத்தவை கடந்த ஒக்டோபர் மாதம் 6ம் திகதி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது  14 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் கட்டளையிட்டிருந்தார்.


இன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் இந்தத் தவறை ICCPR சட்டத்தின் கீழ் பதிவு செய்வதா? இல்லையா? என சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இன்னும் ஆலோசணை கிடைக்கவில்லையென்றும், அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியளில் வைக்குமாரும் நீதவானிடம் சமர்ப்பணம் செய்தனர்.


அதன் பின் இவ்வழக்கில் முஸ்லிம் சமூகத்தின் முறைப்பாட்டாளர்கள் சார்பாக ஆஜராகிய சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்தீன் , சிரேஷ்ட சட்டதரணிகளான. மஹாஸ் யூசுப், முஹம்மத் அன்வர், மற்றும் பசான் வீரசிங்க, எம்.கே.எம். பர்ஸான் ஆகியோர் தமது சமர்ப்பணத்தை கௌரவ நீதவான் லோச்சனா விக்கரமசிங்க அவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். 


இதன்போது" இந்திக்க தொட்டவத்தைக்கு பிணை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இவர் எல்லா மதங்களையும் மிகவும் கேவலமாக இழிவுபடுத்தக் கூடியவர் எனக்கூறி, அது சம்மந்தமான ஆதாரங்களை முன்வைத்து இவருக்கு சாதாரண பிணை வழங்காமல் நிபந்தணையுடன் கூடிய பிணை வழங்க வேண்டும் என்றும் இனி இவர் இது போன்று  மதத்தை நிந்திக்கும் வகையில் பேசினால் அவரது பிணை ரத்து செய்ப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனவும், அவர் தான் கூறிய வார்த்தைகளுக்காக தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டு,


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நபியவர்களை பலரும் சகட்டு மேனிக்கு விமர்சித்தார்கள் இருப்பினும் அவர்களையெல்லாம் நபிகள் நாயகம் மண்ணித்து விட்டார்கள். இந்திக்க தொடவத்தவை சிறையில் வைக்க வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. எமது நபியை பொய்யாக யாரும் அவமானப்படுத்தக் கூடாது அதை தடுப்பதுதான் எமது நோக்கம். நபியின் மீது நாம் வைத்துள்ள அன்பு அளப்பறியது. என நீதவானுக்கு இஸ்லாம் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றியும் மிகத் தெளிவான விளக்கத்தை பல ஆதாரங்களை முன்வைத்து வழங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை சகட்டு மேனிக்கு விமர்சித்தவர்களை கூட எப்படி மண்ணிப்பு வழங்கினார்கள் என்பதற்காக இஸ்லாமிய ஆதாரங்களையும் மன்றுக்கு சமர்பித்தார்.


இதே வேலை மற்ற மதத்தினருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பௌத்த மதத்தின் வழிகாட்டல்களையும் மன்றில் எடுத்துக் கூறிய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள், இந்திக்க தொடவத்த போன்றவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவுகள் தேவைப்படுகிறது என்றால் அதனை அவருக்கு எமது அறிஞர்களை கொண்டு வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 


மேலும் இவ்வாறான பேச்சுக்கள் மூலம் மக்கள் தூண்டப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பார்கள் என்றும்  இது போன்ற  நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்களுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு மீதுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும் என்றும் சுட்டிக்காட்டினர்.


அதன் பின் இந்திக்க தொட்டவத்த சார்பில் சிரேஷ்ட சட்டதரணி உபுல் குமாரப்பெரும, சுசன்த தொடவத்த உட்பட 4 சட்டதரணிகள் முஸ்லிம் முறைப்பாட்டாளர்கள் தரப்பு சட்டத்தரணிகள் குலாம் முன்வைத்த வாதத்தை தாம் ஏற்பதாகவும் தமது சேவை நாடுரனாரால் ஏற்பட்ட தவறுக்காக அனைவரிடமும் தமது வருத்தத்தை தெரிவித்துக்  கொள்வதாகவும் குறிப்பிட்டனர். 


மேலும் இந்திக்க தொட்டவத்தவுக்கு ஐந்து புலன்களும் இல்லை என்றும் நான்கு புலன்களை மட்டுமேயுடையவரென்றும் அதனால் அவரை அறியாமல் சில விடயங்களை பேசி விடுவார் என்றும் இந்திக்க தொட்டவத்தவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்..


இருபக்க வாத விவாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதவான் லோச்சனா வீரசிங்க அவர்கள் முஸ்லிம் சமூக  முறைப்பாட்டாளர்கள்  சார்பான சட்டதரணிகள் பாராட்டத்தக்க முறையில் நடந்து கொண்டனர் என்று சுட்டிக்காட்டியதோடு,  இந்திக்க தொட்டவத்த ஒரு புலன் குறைந்தவர் என்ற விடயம் ஒருபோதும் அவருக்கு மன்னிப்பாக அமைய மாட்டாது என்றும் அவருக்கு அவ்வாறான பிரச்சினை இருந்தால் அதாவது தன்னை கட்டுப்படுத்தி பேச முடியாவிட்டால் அவர் இவ்வாறான மதம்சார்ந்த  விடயங்களை பொது வெளியில் பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றும்,


ஒரு தனிநபரின் செயற்பாட்டுக்காக முழு நாடும் பிரச்சினையை எதிர் நோக்கவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும் மதம் சம்மந்தமான வாத விவாதங்கள் செய்வதென்றாலும் கெளரவமான முறையில் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மேலும் இந்திக்க தொட்டவத்த இனிமேல் இவ்வாறான கீழ்த்தரமான, இழிவான பேச்சுக்களை பொது வெளியில் பேசக்கூடாது என்றும் எச்சந்தர்ப்பத்திலேனும் அவ்வாரு பேசினால் பிணை நிபந்தனையை மீறியதன் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்படுவாரென்றும் கடுமையான நிபந்தனையுடன் பிணை நீதவான் அவர்கள் நிபந்தணையுடன் கூடிய பிணையை வழங்கினார். அடுத்த வழக்கு ஜனவரி மாதம் 19ம் திகதி நடைபெறும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »