Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் தாக்குதல் - அவுஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை.

 



உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதியில் இது மிகவும் ஆபத்தான தருணம் என இஸ்ரேலிய ஹமாஸ் மோதல்; குறித்து  அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.


ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமருடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு அதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் ஆனால் அவர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளார் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் வட்டாரங்களல் இந்த விடயம் குறித்து மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலை ஹமாசே முன்னெடுத்துள்ளது  இவ்வாறான  தாக்குதலிற்கு நீண்ட திட்டமிடல்கள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஆயிரத்திற்குள் மேற்பட்ட ரொக்கட்கள் ஏவப்பட்டமை குறித்த கரிசனை உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இதனால் மிக மோசமான நிலை உருவாகக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகின்றன இது மிகவும் கொந்தளிப்பான பகுதியில் ஆபத்தான நேரம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவி;த்துள்ளார்.

இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் ஆனால் பொதுமக்களை இலக்குவைக்கும்போது பொறுமை நிதானம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »