Our Feeds


Sunday, October 8, 2023

Anonymous

இசை நிகழ்வு நடக்கும் போது மழைபோல் வீழ்ந்த ரொக்கட்கள் - ஹமாஸ் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்கள்

 



CNN

6.30 மணியளவில் ரொக்கட்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின என டல்கிப்லி சி.என்.என் க்கு தெரிவித்தார்.

அதற்கு அரைமணித்தியாலத்தின் பின்னர் அவரும் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்களும் அங்கிருந்து தப்பியோட தொடங்கினர் - காசாவிலிருந்து ஹமாஸ் படையினர் தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பியோட தொடங்கினர்.

நாங்கள் திறந்த அரங்கில் நின்றிருந்ததால் ஓடி ஒளியக்கூட இடமிருக்கவில்லை என கிப்லி தெரிவித்தார். அனைவரும் பதற்றமடைந்தனர் தங்கள் பொருட்களை எடுக்கத் தொடங்கினார்கள் என்றார் அவர்.

காசா - இஸ்ரேல் எல்லையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவிலிருந்து  அந்த திறந்த வெளியரங்கிலிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த வேளை பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்பதை கிப்லியும் அவரது நண்பிகளும் எடுத்த வீடியோக்கள் காண்பித்தன.

இமாலே என யாரோ தெரிவிப்பதை கேட்க முடிந்தது - அச்சம் ஏற்படும் போது இஸ்ரேலியர்கள் அந்த சொல்லை பயன்படுத்துவார்கள்.

எனினும் இரண்டு மைல் தொலைவில் காசா ஆயுதாரிகள் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லை மீது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது கிப்லிக்கு தெரியாது.

அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தப்பியோட தொடங்கியதால் வீதிகள் வாகன நெரிசலில் சிக்குண்டன. எவரும் நகர முடியாத நிலையேற்பட்டது.

அதன்போது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற ஆரம்பித்தது.

கிப்லி போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

காரை செலுத்துங்கள் காரை செலுத்துங்கள் என யாரோ சத்தமிடும் சத்தம் கேட்டது. நெரிசலில் சிக்கியிருந்த வாகனங்களை முந்திக்கொண்டு இஸ்ரேலிய இராணுவ வாகனமொன்று செல்வதை காணமுடிகின்றது.

வீதியில் காணப்பட்ட மக்கள் வாகனங்களில் ஏறி தப்பிச் செல்ல முயல்வதை காணமுடிகின்றது.

கடவுளே கடவுளே அதற்கு ஊடுருவியவர்களே காரணம். காரை செலுத்துங்கள் செலுத்துங்கள் என யாரோ அலறுகின்றார்.

அந்த வேளையே தானும் நண்பர்களும் அச்சமடைந்து காரை விட்டுவிட்டு தப்பியோட தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள்  தப்பியோடுவதை வீடியோக்கள் காண்பிக்கின்றன.

திறந்த வெளிகள் ஊடாக பலர் ஒடுவதையும் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காணமுடிகின்றது.

நிலத்தில் விழுபவர்கள் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக நிலத்தில் விழுந்து படுக்கின்றார்களா அல்லது  துப்பாக்கி சூட்டினால் விழுகின்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

மக்களுடன் தப்பியோட முயலும் வாகனங்கள் மீது போராளிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதால் ஏற்பட்ட பதற்றத்தை  உயிர்தப்பிய ஓர்டெல் என்பவர் வர்ணித்துள்ளார்.

எங்கிருந்தோ தீடிரென துப்பாக்கி வேட்டுகள் வரத்தொடங்கின என அவர் இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். நான் கார் சாவியை எடுத்துக்கொண்டு தாக்குதலில் இருந்து முன்னோக்கி செல்ல தொடங்கினேன் என்றார் அவர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் எங்களை முந்திக் கொண்டு வந்து விட்டனர் அவர்கள் எங்கள் வாகனங்களை நோக்கி சுட்டனர் நாங்கள் வாகனத்திலிருந்து வெளியே வந்து மறைந்திருந்தோம் என கிப்லி தெரிவித்துள்ளார்.

நான் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றேன் மீண்டும் வந்து பார்த்தபோது கார் ஒன்று வந்தது நாங்கள் அதில் ஏறிச்சென்றோம் அப்போதும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டன என்கின்றார் அவர்.

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் வானிற்கு வெளியே சுடப்பட்டார் மற்று மொருவர் சாரதியின் ஆசனத்தில் உயிரிழந்தர் என்றார் கிப்லி

சி.என்.என் க்கு கிடைத்த வீடியோவில் காணப்பட்ட இருவரே தான் உயிரிழந்த நிலையில் பார்த்தவர்கள் என்பதை அவர் உறுதி செய்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »