Our Feeds


Friday, October 20, 2023

News Editor

சீனாவில் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி


 சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள "வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விகாரை மற்றும் ஸ்தூபி அமைக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

பீஜிங்கில் "வெள்ளை குதிரை” (சுது துரங்க) விகாரையின் விகாராதிபதி வண. யின் லீ தேரர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த காலத்தில் "வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை விகாரை மண்டப நிர்மாணப் பணிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அடிக்கல் நடப்பட்டது.

 

ஆனால், அதன் பின்னர் அதன் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மீண்டும் அந்தப் பணிகளை ஆரம்பிக்குமாறும், விகாரை மண்டபத் திட்டங்களை புதிதாக தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

 

பாஹியன் பிக்குவினால் இலங்கையிலிருந்து சீனாவிற்கு கொண்டு வரப்பட்ட பௌத்த பாலி நூல்களின் பிரதிகளை இந்த விகாரையில் வைப்பதற்காக இந்த விகாரை மண்டபம் இலங்கையினால் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »