Our Feeds


Sunday, October 1, 2023

SHAHNI RAMEES

எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது சினோபெக்..!

 


சினோபெக் நிறுவனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

 

அதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 420 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 348 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சுப்பர் டீசலின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 417 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

92 ஒக்டேன் பெற்றோல் விலையில் மாற்றமில்லை (358). இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நாளையுடன் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »