Our Feeds


Sunday, October 15, 2023

SHAHNI RAMEES

கொஸ்லாந்த, மீரியபெத்த மக்கள் உடன் வெளியேற்றம்...!

 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் படி கொஸ்லாந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தின் இருபுறங்களிலும் உள்ள 244 குடும்பங்கள் உடனடியாக அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே. ஜே. பிரியங்கிகா தெரிவித்தார்.

 

கொஸ்லாந்த மீரியபெத்தவை சேர்ந்த 144 குடும்பங்கள் கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலைக்கும், மஹகந்தவில் 23 குடும்பங்கள் மல்வண்ண தேயிலை தொழிற்சாலைக்கும், திபுல்கசமுல்லவை கொஸ்லந்த சிங்கள வித்தியாலயத்துக்கும், கொஸ்லந்த தமிழ் வித்தியாலயத்துக்கும் 81 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பிராந்திய செயலாளர் தெரிவித்தார்.

 

இரவு வேளைகளில் யானைகள் சுற்றித் திரிவதால், மஹகந்த வத்தை பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முகாம்களில் தற்போது 768 பேர் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »