முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த காரின் மீது, நுழைவாயில் கதவொன்று நேற்று வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மத்திய அதிவேக வீதியின் குருநாகல் நுழைவாயிலிலுள்ள கதவொன்றே, இவ்வாறு காரின் மீது வீழ்ந்துள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவமொன்று நேர்ந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிவேக வீதியின் நுழைவாயிலில் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஒரே அதிகாரியாக கடமையாற்றியிருந்தார் என்பது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.