Our Feeds


Tuesday, October 24, 2023

SHAHNI RAMEES

இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என ஒபாமா எச்சரிக்கை..!

 



இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை

ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.




அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. 2 முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒபாமா சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்  இடையேயான மோதலை குறிப்பிட்டார். அவர் பேசும்போது, போரில் மனித உயிரிழப்பு நிகழ்வை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையானது, எதிர்விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். 




அவர் தொடர்ந்து பேசும்போது, சிறை பிடித்து வைக்கப்பட்ட மக்களுக்கான (காசா) உணவு, நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை நிறுத்துவது என்ற இஸ்ரேல் அரசின் முடிவானது, வளர்ந்து வரும் மனிதநேய நெருக்கடியை மோசமடைய செய்வதுடன், பல தலைமுறைகளாக பாலஸ்தீனர்களின் சிந்தனைகளை இன்னும் கடினம் ஆக்கிவிடும்.




இஸ்ரேல் மீது ஹமாஸ்  நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள ஒபாமா, இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என்று அந்நாட்டுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். எனினும், இதுபோன்ற போர்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.




இந்த அறிக்கையை வெளியிடும் முன், அதிபராக ஒபாமா பதவி வகித்தபோது, எட்டு ஆண்டுகளாக துணை அதிபராக பதவி வகித்த ஜோ பைடனிடம் இதுபற்றி முன்பே பேசினாரா? என்ற விவரங்கள் தெரியவரவில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »