Our Feeds


Thursday, October 5, 2023

SHAHNI RAMEES

குர்ஆன் மற்றும் முஹமது நபி (ஸல்) குறித்து அவதூறாக பேசியதற்காக இந்திக்க தொட்டவத்த மீது போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


 குர்ஆன் மற்றும் முஹமது நபி ஸல்லல்லாஹு அலைஹி

வஸல்லம் குறித்து அவதூறாக பேசியதற்காக யூ டியூப் பதிவாளர் இந்திக்க தொட்டவத்த மீது போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


 இஸ்லாமிய மத நம்பிக்கை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் வலைப்பதிவாளர் இந்திக தொட்டாவத்தவிற்கு எதிராக கொழும்பு - 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.  


 29 செப்டம்பர் 2023 அன்று sathya vlogs என்ற யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார். இதன்படி

இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்ட வத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.  இவை பிணையில் விடப்பட முடியாத மற்றும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படக்கூடிய தவறுகளாகும் என்பதோடு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


 முறைபாட்டாளருடன் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களது அறிவுறுத்தலின் கீழ் சட்டத்தரணிகளான ஷைனாஸ் முஹம்மத் மற்றும்  எம் .கே .எம். பர்ஷான் ஆகியோர் பிரதான போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் மா அதிபரை சந்தித்து முறைப்பாட்டுடன் கடிதமொன்றையும் கையளித்தனர் .


 இது சம்பந்தமாக சட்ட முறையான நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் உறுதியளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »