Our Feeds


Wednesday, October 25, 2023

News Editor

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்


 சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையத் திட்டங்களுக்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து முன்மொழிவுகளை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 200 மெகாவாட் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »