Our Feeds


Monday, October 16, 2023

Anonymous

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றை நாடினார் ஊடகவியலாளர் றிப்தி அலி

 



நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உயர் நீதிமன்றத்தில் இன்று  (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராய்ச்சியின் ஊடாக இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனுத் (Special Determination) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும், மக்கள் தீர்பளிப்பின் மூலமூமே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம், கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்ப்பட்டது.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல். பீரிஸ், ரஞ்சித் மதும பண்டார, ஊடகவியலாளர்களான லசந்த ருகுணுகே, தரிந்து உடுவரஹே உள்ளிட்ட பலர்  நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »