Our Feeds


Thursday, October 12, 2023

News Editor

நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும்


 நாட்டில் முன்பள்ளி, பாடசாலை கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உலகிலும் எதிர்காலத்திலும் இலங்கையின் கல்வி முறை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள 19 கல்லூரிகள் மற்றும் 8 ஆசிரியர் கல்லூரிகள் இணைக்கப்பட்டு ஆசிரியர் கல்விக்கென தனி கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே தமது எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »