Our Feeds


Monday, October 30, 2023

Anonymous

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஹிஸ்புல்லாஹ்.

 



இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக லெபனானிலிருந்து இயங்கும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தைய மோதல்களில் முதல் தடவையாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளது.

தென் லெபனானின் கியாமில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் இஸ்ரேலிற்குள் விழுந்தது எனவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலுடனான மோதல்களில் தனது அமைப்பை சேர்ந்த 46 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »