Our Feeds


Friday, October 20, 2023

Anonymous

டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் திடீர் அனுமதி

 



இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா பாராளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »