Our Feeds


Tuesday, October 17, 2023

Anonymous

எமது கொல்லை புறத்தில் எவரும் இராணுவ தளங்களை அமைக்க அனுமதிக்க மாட்டோம் - இலங்கை திட்டவட்டம்.

 



நாங்கள் பக்கம் சாயமாட்டோம் நாங்கள் எந்த தரப்புடனும் பதற்றத்தை விரும்பவில்லை. எந்த நாட்டை அச்சுறுத்துவதற்கும் எங்கள் கொல்லை புறங்களை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். என வெளிவிவகார  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


அவர்கள் தங்கள் இராணுவ தளங்களை அமைப்பதற்கு எங்கள் கொல்லை புறங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். அது உறுதியான விடயம். என சனல் நியுஸ் ஏசியாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

கேள்வி - நெருக்கடியான தருணத்தில் இலங்கையுடன் சீனாவின் உறவுகளை எப்படி வர்ணிப்பீர்கள்?

சீனாவின் உறவுகள் எங்களிற்கு மிகவும் முக்கியமானவை சீனாவின் முதலீடுகள் எங்களிற்கு மிகவும் அவசியமானவை இலங்கை போன்ற நாடுகளிற்கு முதலீடுகள் அவசியம்.

2009 இல் நாங்கள் விடுதலைப்புலிகளை தோற்கடித்து இந்த நாட்டிற்கு  அமைதியை கொண்டுவந்தவேளை நாட்டிற்கு பெரும்  முதலீடு தேவைப்பட்டது.

நாங்கள் இலங்கையை மாத்திரம் அழைக்கவில்லை நாங்கள்  முழு உலகையும் அழைத்தோம்,

ஏனைய நாடுகள் பொறுத்திருந்து பார்க்க நினைத்தன  ஆனால் சீன துணிந்து முன்வந்தது,நாங்கள் அதற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம்.

அடுத்த கட்ட அபிவிருத்தியை நோக்கி நகரும்போது -அது அபிவிருத்தியை மையமாக கொண்டது அபிவிருத்தியை மையமாக கொண்டது என்றால் யாராவது பணத்தை முதலீடு செய்யவேண்டும்,அதன் அர்த்தம் முதலீடு.

உலகின் முக்கிய பொருளாதா நாடுகளில் சீனாவிடம் அதிகளவு வலுவுள்ளது நிதியுள்ளது, அவர்கள் முதலீடுகளிற்காக காத்திருக்கின்றனர் எதிர்பார்த்திருக்கின்றனர். புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலோபாய பகுதியாக அவர்கள் முதலீடு செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

எங்களிற்கு சீன முதலீடுகள் அவசியமானவை நாங்கள் அந்த முதலீடுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

கேள்வி - இலங்கையின் உத்தேச புதிய பட்டுப்பாதை திட்டம் கடன்பொறிக்கான ஒரு சாதனமாக பயன்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்படுவது குறித்து நீங்கள் எவ்வளவு தூரம் கரிசனை கொண்டிருக்கின்றீர்கள்

பதில் - நாங்கள் அப்படி நினைக்கவில்லை அவர்கள் கடன் பொறிமுலம் எதனை சாதிக்கப்போகின்றனர்?

ஒரு நாட்டில் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் அதன் மூலம் கிடைக்ககூடிய இலாபத்தை எதிர்பார்ப்பீர்கள் இலாபம் கிடைக்கவேண்டும் என நீங்கள் நினைத்தால் அந்த நாடு வெற்றிபெறுவதை நீங்கள் விரும்புவீர்கள்.

இந்த விடயத்தில் நாங்கள்  எங்கு தோல்வியடைந்துள்ளோம் என்றால் எங்கு முதலீடு செய்வது எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நாங்கள் சரியாக தீர்மானிக்கவில்லை.ஆகவே இந்த விடயத்திலேயே இலங்கை தற்போது சரியான  முடிவை எடுக்கவேண்டியுள்ளது. முதலீடு தொடர்பான சரியான முடிவை எடுக்கவேண்டியுள்ளது.

நாங்கள் ஒரு விடயத்;தில் தெளிவாக உள்ளோம் நாங்கள் இனிமேலும் கடன்வாங்கப்போவதில்லை  நாங்கள் என்ன கேட்கின்றோம் என்றால் முதலீடு வாய்ப்புகள் இணைந்து செயற்படுதல்.இந்த நெருக்கடி காரணமாக நாங்கள் அந்த பாடத்தை கற்றுக்கொண்டுள்ளோம்.

கேள்வி - நாடுகள் எந்த துறைகளில் முதலீடு செய்யக்கூடாது என்பதை தற்போது உணருவது குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கும்போது -இலங்கை எந்த துறைகளில் முதலீடு செய்யக்கூடாது என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் - ஆம் நாங்கள் வேறு சில இடங்களில்  முதலீடு செய்திருக்கலாம் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் உட்கட்டமைப்பை கட்டியெழுப்பவேண்டியது அவசியம்

அதேவேளை உட்கட்டமைப்புடன் உற்பத்தி பொருளாதாரமும் அவசியம்.தொழில்துறைகள் உருவாகவேண்டும் ஆகவே இந்த உட்கட்டமைப்பு அவற்றிற்கு உதவமுடியும்.

துரதிஸ்டவசமாக இலங்கையில் இந்த செயற்பாடு இடம்பெறவில்லை.

கேள்வி - இலங்கை பெரும் அதிகாரப்போட்டியில் சிக்குண்டுள்ளது  என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் - நாங்கள் நடுவில் நிற்கின்றோம் - நாங்கள் பக்கம் சாயமாட்டோம் நாங்கள் எந்த தரப்புடனும் பதற்றத்தை விரும்பவில்லை.எந்த நாட்டை அச்சுறுத்துவதற்கும் எங்கள் கொல்லை புறங்களை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.

அவர்கள் தங்கள் இராணுவ தளங்களை அமைப்பதற்கு எங்கள் கொல்லை புறங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.அது உறுதியான விடயம்.

ஆனால் நாங்கள் அவர்கள் அனைவருடனும் மூலோபாய உறவுகளை பேணுகின்றோம். எங்களின் பெரிய சந்தை அமெரிக்கா - அங்கேயே எங்கள் உற்பத்திகள் அதிகமாக அங்கேயே செல்கின்றன.

இந்தியா எங்களின் அயல்நாடு எங்களின் மிகப்பெரிய வர்த்தக சகா - கடந்த வருடம் மிக நெருக்கடியான நிலையிலிருந்து எங்களை காப்பாற்ற இந்தியா உதவியது.

சீனா எங்களின் நீண்ட கால நண்பர் சர்வதேச அரங்கில் அது இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »